முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் வறட்சி எதிரொலி: இத்தாலியில் 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

புதன்கிழமை, 6 ஜூலை 2022      உலகம்
Italy 2022-07-06

Source: provided

ரோம் : இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இத்தாலியின் மிக நீளமான போ நதியை ( போ நதி அளவு 650 கிமீ) சுற்றியுள்ள 5 மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியினால் நாட்டின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 சதவீதத்திற்கும் அதிகமான விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி தடுக்கும் பொருட்டு வடக்கில் உள்ள ஐந்து மாகாணங்களில் (லோம்பார்டி, எமிலியா-ரோமக்னா, பிரியூலி வெனிசியா கியுலியா, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ )இத்தாலி அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.

வறட்சி கடுமையாக ஏற்பட்டுள்ள 5 மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்க சுமார் 36.5 மில்லியன் யூரோவை இத்தாலி அரசு ஒதுக்கி உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளன.   

வறட்சியை கட்டுப்படுத்தவே அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. மேலும் வறட்சி நிலைமையை சமாளிக்க சிறப்பு குழுவையும் அமைத்துள்ளது.  கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை இத்தாலி எதிர்கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து