முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
Manoj-Pandiyan

Source: provided

சென்னை: தி.மு.க.-வில் இணைந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். 

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஆலங்குளம் தொகுதியில் இருந்து அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. காலை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கனிமொழி எம்.பி., அமைச் சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிலையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து