முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர் பணிகளில் குழப்பம்: என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      தமிழகம்
NR-Ilango 2023 06 30

Source: provided

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியில் கணக்கீட்டு படிவங்கள் வழங்கவில்லை என்று என்.ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (05.11.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது குறித்த செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பீகாரை அடுத்து இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களில் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை நடக்கிறது. இது பல குழப்பங்களை விளைவிக்கும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலிலிருந்தே கூறி வந்ததாகவும், இதன் விளைவாக பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை குறித்து, இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை செய்து, பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்து, அதன் பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

எஸ்.ஐ.ஆர். பணிகள் துவங்கிய நிலையில் அதில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. பெரும்பாலான இடங்களில், பிஎல்ஓக்கள் என அழைக்கப்படும் அதிகாரிகள் நேற்று எந்த இடத்திற்கும் வந்து கணக்கீடு படிவங்களைத் தரவில்லை. அதிகாரிகளை விசாரித்தால், தங்களுக்கு படிவங்கள் வந்து சேரவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். 30 நாட்களில் ஒரு நாள் படிவங்கள் வழங்கப்படாமலே போய்விட்டது.

விவசாயிகள் நிலத்தில் இருக்க வேண்டிய காலத்தில் இந்தப் பணி மிகுந்த சிரமத்துக்குள்ளான காலம். மேலும், பிப்ரவரி 2026 வரை நடக்கவிருக்கும் இந்தப் பணிகளுக்கு இடையில் கிறிஸ்மஸ்,பொங்கல் பண்டிகைகள் வருகின்றன. இவற்றை தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளவில்லை , இக்காலங்களில் ஊழியர்களாக இருக்கட்டும் வாக்காளர்களாக இருக்கட்டும், களத்தில் இருந்து பணிகளைச் செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஏற்கனவே பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகும் கூட, ஏறக்குறைய 65 லட்சம் வாக்காளர்களை எந்தவித விசாரணையும் இல்லாமல் நீக்கி, குளறுபடியான வாக்காளர் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 33 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக குடிபெயர்ந்து போய்விட்டார்கள் என்று காரணம் கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில் விதி மீறல்களும் சட்ட மீறல்களும் இருப்பதைச் சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக என்.ஆர். இளங்கோ தெரிவித்தார். குறிப்பாக, அடையாள ஆவணங்கள் குறித்த 13வது விதி குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்தார். பீகாரில் நடந்த எஸ்ஐஆருக்குப் பிறகு வெளியிடப்பட்ட 1/7/2025 தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அதை ஒரு அடையாள ஆவணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் அல்லது 12 மாநிலங்களில் வாக்காளர் ஆகலாம் என்று கூறியிருப்பது பெரிய குழப்பத்தை விளைவிக்கும்.

தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், "எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரும் நீக்கப்படக் கூடாது, எந்த ஒரு தகுதியற்ற வாக்காளரும் சேர்க்கப்படக் கூடாது என்பதே எங்களுடைய கோரிக்கை" என்று உறுதிபடத் தெரிவித்தார். அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ’ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத அ.தி.மு.க. ஆதரிக்கத்தான் செய்வார்கள்’ என்று பதிலளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து