எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கரூர்: கரூர் கூட்ட நெரிசல்: 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. மீண்டும் விசாரணை நடத்தியது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், வேலுச்சாமிபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் சாலையோர கடை உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்ளிட்ட 306 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 7 காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் 12 பேர் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கூட்ட நெரிசல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். சுமார் 3 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 3 காவல் உதவி ஆய்வாளர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஆஜரான 7 பேரில் 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்புப்பணியில் இருந்த 3 காவல் உதவி ஆய்வாளர்களிடமும் கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


