Idhayam Matrimony

பீகாரிலும் ரவுடிகளின் வீடுகள் புல்டோசரால் தகர்க்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      இந்தியா
Yogi 1

Source: provided

சமஸ்திபூர்: உத்தர பிரதேசத்தைப் போல் பீகாரிலும் ரவுடிகளின் வீடுகள் புல்டோசரால் தகர்க்கப்படும் என்று உ.பி. முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ' மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமஸ்திபூர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரீய ஜனதாதளம் ஆட்சியில் இருந்தபோது, இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. காட்டாட்சி கொண்டுவரப்பட்டது. நிதிஷ்குமார் வந்த பிறகுதான் நல்லாட்சி சகாப்தம் தொடங்கியது. ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., மருத்துவ கல்லூரிகள் ஆகியவையும் துறைமுகங்களும் கட்டப்பட்டன. அதன்மூலம், விவசாய விளைபொருட்கள் சர்வதேச சந்தைகளை அடைந்தன.

உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. அவர்களின் சொத்துகள், ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. பீகாரிலும் அதே நடவடிக்கையை பார்க்கப் போகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து