முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம்: மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது

புதன்கிழமை, 6 ஜூலை 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : நிலத்தடி நீருக்கு ரூ. 10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. 

நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவைக் கணக்கிட்டு கட்டணம் நிா்ணயம் செய்வதற்கும் மத்திய அரசு தண்ணீா் கொள்கை 2012 என்கிற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி வீடுகள் மற்றும் வேளாண் உள்பட நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணையம் மூலமாக ரூ.10,000 கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும், மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீர் தொடர்ந்து எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது. நிலத்தடி நீர் பாதுகாப்பு, நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மைய நீர்வளத்துறை, தலைமை பொறியாளர் விடுத்துள்ள பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

இந்திய அரசு, ஜல் சக்தி அமைச்சகம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண். 3/2022, நாள். 10.04.2022, தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து