முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் குகை கோயில் பகுதிகளில் திடீர் வெள்ள பெருக்கு - 5 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2022      இந்தியா
Amarnath 2022-07-05

Source: provided

ஸ்ரீநகர் : மேக வெடிப்பு காரணமாக காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோவில் பகுதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் ஆற்றங்கையோரம் அமைக்கப்பட்ட கூடாரங்கள் சேதமடைந்தன. இதில் 5 யாத்திரீகர்கள் பலியாயினர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரின் அமர்நாத்தில் உள்ள குகைக் கோவிலில் இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன் 30-ல் துவங்கி, ஆகஸ்ட் 11 வரை நடக்க உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யாத்திரீகர்களின் பயணத்தையும் அவர்களின் பாதுகாப்பையும் கண்காணிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் அமர்நாத் குகை கோயில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேக வெடிப்பு காரணமாக இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளப்பெருக்கால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கூடாரங்கள் அடித்து செல்லப்பட்டன.

இதில் தங்கியிருந்த 5 யாத்திரீகர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்தோ திபெத் பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து