முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் சோனியா விரைந்து நலம் பெற கர்நாடக முதல்வர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2022      இந்தியா
soniya--- 2022 07 15

Source: provided

புதுடெல்லி: கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சோனியா காந்தி நலம் விசாரித்தார். விரைந்து நலம் பெற கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்துப் பேசினார்.

இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதிவிட்டுள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில், 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து மீள வாழ்த்துகிறேன். அவர் விரைந்து நலம் பெற்று, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து