முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி உலக செல்வந்தர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் கௌதம் அதானி

வியாழக்கிழமை, 21 ஜூலை 2022      உலகம்
GOWTHAM-ATHANI----------2022-07-21

Source: provided

வாஷிங்டன்: உலக செல்வந்தவர்கள் பட்டியலில் பிட்கேஸை பின்னுக்குத் தள்ளி 4-வது இடம்பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியலில் இருப்பவர். இந்நிலையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி 115 பில்லியன் டாலர்(ரூ.9.2 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 4-வது இடம் பிடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது உலக செல்வதர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். 

உலக செந்தவர்கள் பட்டியலில் எலான் மஸ்க் (ரூ.18 லட்சம் கோடி) முதலிடத்திலும் எல்விஎம்எச்(LVMH) நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (12.5 லட்சம் கோடி) 2-வது மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ்(ரூ.11.4 லட்சம் கோடி) 3-வது இடத்திலும் உள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 101.4 பில்லியன் (ரூ.8.4 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5-வது இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 10 இடத்தை தக்க வைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து