முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதற்றமான சூழல்: 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணையதள சேவைகள் முடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      இந்தியா
Manipur 2022-08-07

Source: provided

இம்பால் : பதட்டமான சூழல் நிலவுவதால் மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் முடக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, அம்மாநில உள்துறை சிறப்புச் செயலாளர் ஞானபிரகாஷ் பிறப்பித்த உத்தரவில்,  சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெறுப்புப் பேச்சுகளை பரப்புகின்றனர். இதன் காரணமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம், தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை தொடங்கியுள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது. மணிப்பூரில் ஆளும்கட்சியாக உள்ள பா.ஜ.க. அரசு, தங்கள் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி இந்த போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பிஷ்ணுபூர் மாவட்ட கலெக்டர், மாவட்டம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், மணிப்பூர் முழுவதும் 5 நாட்களுக்கு மொபைல் போன் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து