முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டம்: இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்று சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Sandeep-Kumar 2022-08-07

Source: provided

பர்மிங்ஹாம் : 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார். பர்மிங்காம், 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 16 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று குத்துச்சண்டையில் இந்திய அணி 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் மகளிர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம், மும்முறை தாண்டுதலில் 2 பதக்கம் என அசத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார். அவர் 38:49 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெண்கலம் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து