முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 பிப்ரவரிக்குள் மயிலாடுதுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் : ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : மயிலாடுதுறை ஸ்ரீஅக்னீஸ்வரர் கோயிலில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தபடும் என அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கபட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, நல்லாடை என்னுமிடத்தில் உள்ள பரணி நட்சத்திர பரிகார கோயிலான சுந்தரநாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் சிதிலமடைந்திருப்பதால், சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, ஜெகன்நாத் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், "கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாக குழுக்களிடம் அனுமதி பெற்று கும்பாபிஷேக பணிகளுக்காக ரூ.31 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கான பணிகள் தாமதமின்றி நடந்து வருகிறது.

மேலும், 2023 பிப்ரவரி மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்" என அறிக்கையில் தெரிவிக்கபட்டிருந்தது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து