முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட் சூட் அணிய முடியாமல் தவித்த ஜோபைடனுக்கு உதவிய மனைவி

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      உலகம்
Joe-Biden 2022-08-10

Source: provided

வாஷிங்டன் : கோட், சூட் அணிய முடியாமல் தவித்த அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு அவரது மனைவி உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித்தது மட்டுமின்றி பல வாக்குறுதிகளையும் அளித்தார்.

தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது அவர் கென்டக்கி விமான நிலையத்திற்கு வந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் செல்ல முயன்ற போது, தனது கோட் சூட் அணிய முயன்றார். ஆனால், அவரால் கோட் சூட்டை அணிய முடியவில்லை.

ஒரு கையை கோட் சூட்டில் மாட்டிய அவர், மற்றொரு கையை கோட் சூட்டில் விடமுடியாமல் தவித்தார். ஒரு கட்டத்தில் தனது அருகில் நின்றிருந்த மனைவியின் உதவியை நாடினார். பின்னர் அவர்தான் ஜோ பிடனுக்கு கோட் சூட் அணிய உதவினார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து