முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை: 2-ம் இடத்தில் தொடரும் சூர்யகுமார்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Suryakumar 2022 08 10

Source: provided

துபாய் : ஐ.சி.சி. டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறார்.

பாபர் ஆசம்... 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. இந்நிலையில், டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி, டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த பேஸ்மேனாக பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேஸ்ட்மேன் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். சிறந்த டி20 பேட்ஸ்மேன் பட்டியலில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 3-வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஆடன் மார்க்ரம் 4-வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மாலன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

ஜோஷ் ஹெசல்வுட்... 

டி20 போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் பத்ரைஸ் ஷம்சி 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3-வது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ரஷித் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் சாம்பா 5-வது இடத்திலும் உள்ளனர்.

முகமது நபி.... 

டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ஸ்வெல் 4-வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ரோஹன் முஸ்தபா 5-வது இடத்திலும் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து