முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் ஒரே நேரத்தில் இரு தொற்றுகளால் மக்கள் பாதிப்பு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2022      உலகம்
covid-2022 08 11

நேபாளத்தில் கொரோனா, பன்றி காய்ச்சல் என ஒரே நேரத்தில் இரு தொற்றுகள் மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

உலக நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசின் 4-வது அலையில் நேபாளம் சிக்கி தவித்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை கொரோனாவுக்கு 1,090 பேர் பாதிப்படைந்தும், 2 பேர் உயிரிழந்தும் உள்ளனர். 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. அந்நாட்டின் மருத்துவமனைகளில், கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்புகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெறுவது அதிகரித்து உள்ளது. 

இதனை தொடர்ந்து நிபுணர்கள், இந்த தருணங்களில் தவறான சிகிச்சை மற்றும் அலட்சிய போக்கு அதிகரித்து, காலதாமத சிகிச்சைக்கு வழிவகுத்து மரணங்கள் கூட ஏற்பட கூடும் என எச்சரித்து உள்ளனர். இதனால், அந்நாட்டில் இரண்டு வகை பெருந்தொற்றுகள் ஏற்பட கூடும் என பல்வேறு பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பன்றி காய்ச்சலால், அந்நாட்டின் பல மூத்த அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் கூட கடந்த காலங்களில் உயிரிழந்து உள்ளனர் என தொற்று நோய்க்கான மருத்துவமனையின் ஆராய்ச்சி பிரிவு தலைவரான மருத்துவர் ஷேர் பகதூர் புன் கூறியுள்ளார். அந்நாட்டில் இதே காலகட்டத்தில் ஏ.எச். 3 வைரசால் ஏற்படும் ஹாங்காங் காய்ச்சலும் 55 பேருக்கு ஏற்பட்டு உள்ளன என உலக சுகாதார அமைப்பின் சர்வதேச இன்புளூயன்சா கண்காணிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து