முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு : அடுத்து வரவிருக்கும் போட்டிகளுக்கு ஆயத்தமாக வேண்டுகோள்

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Modi 2022 01 13

Source: provided

புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார். பின்னர் பேசிய அவர் அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய வீரர்கள் ஆயத்தமாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமருடன் சந்திப்பு...

இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்திய அணியினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். அவரை வரவேற்ற பிரதமர், காமன்வெல்த் விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கணைகளின் சாதனைகள் மிகுந்த பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். அவர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:- 

வெற்றிக்கொண்டாட்டம்...

நீங்கள் அனைவரும் பர்மிங்ஹம் போட்டியில் பங்கேற்றிருந்தபோது, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் நள்ளிரவிலும் கண் விழித்திருந்து, உங்களது ஒவ்வொரு செயல்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அணியினரை வழியனுப்பியபோது தாம் வாக்குறுதி அளித்தபடி, இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

புதிய வழிமுறை... 

பல போட்டிகளில் நூல்இழையில் பதக்க வாய்ப்பை நழுவ விட்டோம். பதக்க எண்ணிக்கை என்பது செயல் திறனை முழுமையாக பிரதிபலிக்காது. முந்தைய போட்டியுடன் ஒப்பிடுகையில், 4 புதிய விளையாட்டுகளில், வெற்றிக்கான புதிய வழிமுறையை இந்தியா கண்டறிந்துள்ளது. லான் பவுல் முதல் தடகளம் வரை, நமது வீரர்கள் அற்புதமாக விளையாடியுள்ளனர். இந்த செயல்பாடு மூலம், இதுபோன்ற புதிய விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டும் சூழல், இந்தியாவில் பெருமளவு அதிகரிக்கும்.

சாதனை படைக்க... 

குத்துச்சண்டை, ஜூடோ, மல்யுத்தப் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கிய வீரர்கள் 31 பதக்கங்களை வென்றிருப்பது, இளைஞர்களிடையே நம்பிக்கை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. ஒன்றுபட்ட பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு நமது விளையாட்டு வீரர்கள் வலிமையூட்டியுள்ளனர். விளையாட்டு மட்டுமின்றி பிற துறைகளிலும் சாதனை படைக்க வேண்டுமென்ற உணர்வை, இந்திய இளைஞர்களிடையே விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

பொறுப்பு உள்ளது...

கேலோ இந்தியா விளையாட்டு மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்கள், தற்போது சர்வதேச அரங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய திறமைசாலிகளை அடையாளங்கண்டு, அவர்கள் பதக்கம் வெல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். உலகிலேயே மிகச்சிறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை மற்றும் ஆற்றல்மிக்க விளையாட்டுச் சூழலை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. திறமையுள்ள யாரையும் விட்டுவிடக் கூடாது. அடுத்து வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வீரர்கள் ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து