முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடமையைச்செய் விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
your-duty-review 2022-08-15

Source: provided

எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பில் வெங்கட்ராகவன் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் கடமையைச் செய். கதை, கட்டிடப் பொறியாளரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு திடீரென வேலை பறிபோகிறது. அதனால் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் காவல்காரர் வேலைக்கு செல்கிறார். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்போர் அனைவர் உயிருக்கும் ஆபத்து என சூர்யாவுக்கு தெரிய வருகிறது. அதே நேரம், ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிறார். இந்த நிலையிலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை காப்பாற்ற துடிக்கிறார். அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படமே கடமையை செய். குடும்பத்தை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞனாகவும் வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருக்கும் நோயாளியாகவும் நடிப்பில் கவருகிறார். யாஷிகா ஆனந்துக்கு கதாநாயகி வேடம். அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சேசு, ராஜசிம்மன் உள்ளிட்ட பலரும் தத்தம் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். கட்டுமானத்துறையில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கதையை எழுதி அதற்கு எஸ்.ஜே.சூர்யாவை தேர்ந்தெடுத்ததிலேயே வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் வெங்கட்ராகவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து