முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாவர் விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Cadaver-review 2022-08-15

Source: provided

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கடாவர். இப்படத்தினை அனூப் எஸ்.பணிக்கர் இயக்கியுள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. கதை, மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் கடாவர். அதன் பொருள், மருத்துவர்கள் செயல்முறை படிப்பிற்காக பயன்படுத்தும் உயிரற்ற மனித உடல். கதை, ஒரு நாள் காருக்குள் எரிந்த நிலையில் உள்ள ஒரு சடலத்தை கண்டுபிடிக்கின்றனர் போலீசார். இதில் தடயவியல் துறை நிபுணராக அமலா இணைகிறார். எப்படி கண்டுபிடித்தனர் என்பதே கதை. வித்தியாசமான தோற்றம் வித்தியாசமான நடிப்பு என அசத்தியுள்ளார் அமலாபால்.. வழக்கமான நாயகி டூயட் என்று இல்லாமல் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ஒரு தயாரிப்பாளராகவும் எடுக்க முன் வந்துள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்.அதுல்யா ரவி சின்ன வேடம் என்றாலும் அதற்காக மெனக்கெட்டுள்ளார். அதுபோலவே ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ரித்விகா, என எல்லோருமே தங்கள் நடிப்பில் கச்சிதம். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தம்.ஆரம்பம் முதல் இறுதிவரை பல ட்விஸ்ட்டுகளுடன் இந்த சஸ்பென்ஸ் கதை தொடர்கிறது. எனவே சஸ்பென்ஸ், த்ரில்லர் வகை பட விரும்பிகளை இந்த படம் நிச்சயம் கவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து