முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2025-ம் ஆண்டு வரைக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு - ஐ.சி.சி.

செவ்வாய்க்கிழமை, 16 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Women s-Cricket 2022-08-16

Source: provided

லண்டன் : மகளிர் கிரிக்கெட்டுக்கான 2022-25 காலக்கட்டத்துக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி.

27 ஒருநாள் போட்டி...

இந்திய அணி இக்காலக்கட்டத்தில் (மே 2022 முதல் ஏப்ரல் 2025) 27 ஒருநாள், 36 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ளது. இங்கிலாந்து (5), ஆஸ்திரேலியா (4), தென்னாப்பிரிக்கா (3) ஆகிய அணிகள் இந்தியாவை விடவும் அதிக டெஸ்டுகளில் விளையாடவுள்ளன. 

தலா 1 டெஸ்ட்...

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இந்தியாவில் தலா 1 டெஸ்டை விளையாடவுள்ளன. இந்த அட்டவணையில் ஒவ்வொரு வருடத்திலும் மார்ச் முதல் மே வரை இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதங்களில் அனைத்து வீராங்கனைகளும் மகளிர் ஐபிஎல், ஹாங்காங்கின் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். 

முதல்முறையாக...

எஃப்டிபி எனப்படும் கிரிக்கெட் அட்டவணை முதல்முறையாக மகளிர் கிரிக்கெட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் 7 டெஸ்டுகள், 159 டி20, 135 ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து