முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஹர்மன்பிரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2022      விளையாட்டு
Women-Cricket 2022--09-21

Source: provided

புதுடெல்லி : ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில்...

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிதொடருக்கான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

ஹர்மன்பிரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ், சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா தாகூர், பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியின் போட்டி விவரம்:

1) அக்டோபர் 1-ம் தேதி - இந்தியா, இலங்கை.

2) அக்டோபர் 3-ம் தேதி - இந்தியா, மலேசியா.

3) அக்டோபர் 4-ம் தேதி - இந்தியா, யூ.ஏ.இ.

4) அக்டோபர் 7-ம் தேதி - இந்தியா, பாகிஸ்தான்.

5) அக்டோபர் 8-ம் தேதி - இந்தியா, வங்காளதேசம்.

6) அக்டோபர் 10-ம் தேதி - இந்தியா, தாய்லாந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து