முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு செய்திகளை பரப்பும் போலி யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் வழக்கு மத்திய அரசு அதிரடி முடிவு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      இந்தியா
Central-Government 2022-09-22

Source: provided

புதுடெல்லி: அவதூறு செய்திகளை பரப்பும் போலி யூடியூப் சேனல்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் பலர் தனியாக யூடியூப் சேனல்கள் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டை சீர்குலைக்கும் வகையிலும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பமும் உருவாகிறது.

இதை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டன. இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி யூடியூப்பர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து