முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேசிங்கில் அதிக ரன்: புதிய உலக சாதனை படைத்த பாபர் ஆசாம்-ரிஸ்வான் ஜோடி

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      விளையாட்டு
Babar-Azam 2022--09-23

20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பாபர் - ரிஸ்வான் ஜோடி படைத்துள்ளனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.

2-வது போட்டி...

பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது 20 ஓவர் போட்டி கராச்சியில் நடந்தது. இங்கிலாந்து நிர்ணயித்த 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 19.3 ஓவரில் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 110 ரன்னும், முகமது ரிஸ்வான் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அதிக ரன்கள்...

அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தனர். இதன் மூலம் பாபர் ஆசாம்-முகமது ரிஸ்வான் ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. 20 ஓவர் கிரிக்கெட் சேசிங்கில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர். இதற்கு முன்பு இந்த ஜோடி கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சேசிங்கின் போது 197 ரன் குவித்ததே ஒரு தொடக்க ஜோடியின் அதிக ரன்னாக இருந்தது.

தங்கள் சாதனையை...

அந்த சாதனையை அவர்களே முறியடித்தனர். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 7 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என்ற சமனில் உள்ளது. நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து