முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ. 11.90 லட்சம் வழங்கிய சென்னை மாநகராட்சி தி.மு.க. உறுப்பினர்கள்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
CM-1 2022--09-24

Source: provided

சென்னை : இலங்கை தமிழர் நலன்காக்க  பெருநகர சென்னை மாநகராட்சி தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 11.90 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேற்று வழங்கினர். 

முதல்வர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் சந்தித்து, இலங்கை தமிழர் நலன் காக்க  பெருநகர சென்னை மாநகராட்சி தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களின் சார்பில் முதற்கட்டமாக 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். 

இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  டி.ஆர். பாலு, ஆ. ராசா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ். முருகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், மாமன்ற நிலைக்குழு தலைவர் என். சிற்றரசு, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து