முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் அபய் சிங், கென்சி அய்மன் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      விளையாட்டு
Abyssing-Kenzie 2022--09-25

Source: provided

சென்னை : இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு, எச்சிஎல்-எஸ்ஆர்எஃப்ஐ ஆகியவை சார்பில் இந்திய சுற்றுப்பயணத்துக்கான முதற்கட்ட சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை சென்னையில் நடத்தியது.

இதில் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 96-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், 101-ம் நிலை வீரரான எகிப்தின் கலீத் லபீப்பை எதிர்த்து விளையாடினார். 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 11-4, 11-3, 11-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

மகளிர் பிரிவில் உலகத் தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள எகிப்தின் கென்சி அய்மன், 391-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுனைனா குருவிலாவை எதிர்த்து விளையாடினார். இதில் கென்சி அய்மன் 11-7, 11-2,11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இரு பிரிவிலும் பட்டம் வென்றவர்களுக்கு தலா ரூ.9.70 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து