முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பழம்பெரும் காங். தலைவர் மறைவு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Aariyathan-Mohamat 2022-09-25

Source: provided

கோழிக்கோடு: கேரளாவில் பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் ஆரியதான் முகமது உடல்நலக்குறைவால் காலமானார். 

கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் ஆரியதான் முகமது (87). கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் தொகுதியில் எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கேரள முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர். 1952-ம் ஆண்டு கேரள அரசியலில் நுழைந்த அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். 

தொடர்ந்து கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958-ம் ஆண்டு வரை இருந்தவர். கேரளாவின் 10-வது சட்டசபையின் போது, காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்தவர். 1998-2001-ம் ஆண்டு வரையில் கேரள சட்டசபையின் பொது கணக்கு குழுவின் தலைவராகவும் இருந்தவர். ஈ.கே. நாயனார் பதவி காலத்தில் தொழிலாளர் மற்றும் வன துறை அமைச்சராகவும், ஏ.கே. அந்தோணியின் அமைச்சகத்தில் தொழிலாளர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராகவும் மற்றும் உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சகத்தில் மின்துறை அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில் உடல்நல குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது நேற்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து