முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலாறு அருகே தடுப்பணை: ஆந்திராவின் முயற்சியை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Ops 2022-09-27

Source: provided

சென்னை: பாலாறு அணையின் குறுக்கே தடுப்பணை கட்ட முயலும் ஆந்திர அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசிய ஆந்திர மாநில முதல்வர், தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில், கனகநாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாகவும்,  இதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும், குடிப்பள்ளியில் 0.77 டி.எம்.சி. மற்றும் சாந்திபுரத்தில் 0.33 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார். 

இது குறித்து நீர்வளத் துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அது ஒரு பொதுக்கூட்ட செய்தி என்றும், முன்னர் ஒரு முறை கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக செய்தி வந்தது என்றும், ஆனால் நேரில் பார்த்தபோது அணை கட்டுவதற்கான அறிகுறி அங்கு இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். 

ஆந்திர முதல்வரின் பேச்சு பத்திரிகையில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. இதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆகவே முதல்வர் மு.க.ஸ்டாலின், இது குறித்து அவருடன் பேசி, அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து