முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்பு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை ; பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்ற விவகாரத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்தது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்ட அதே மூன்று நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்திற்காக பாமாயில் பாக்கெட் விநியோகிப்பதற்கும், ஒரு லட்சம் டன் பருப்பு வழங்குவதற்குமான ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறி இருக்கிறார். 

தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததோடு, அந்த நிறுவனங்களுக்கு புதிதாக ஒப்பந்த ஆணைகளை வழங்கி அவற்றை நியாயப்படுத்திப் பேசுவது என்பது உலகில் எங்கும் கண்டிராத ஒன்று. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து