முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல்லில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022--10-05

Source: provided

சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் 1,470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 

2017ல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,470 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு நேற்று ஒருநாள் பயணமாக சென்றார். அப்போது பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைத்தார்.

அதன்பின், எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் பார்வையிட்ட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரூ.1470 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த மருத்துவமனையில் 18 சிறப்பு சிகிச்சைவார்டுகளும், 17சூப்பர் ஸ்பாஷலிட்டி பிரிவுகளும், 18 நவீன அறுவை சிகிச்சை மையங்களும் உள்ளன. இந்த மருத்துவமனையில் 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

247 ஏக்கரில் உருவாகியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கும் அவசரசிகிச்சைப் பிரிவும் உள்ளது. இது தவிர டயாலிசிஸ் பிரிவு, அல்ட்ரோசோனோகிராபி சிகிச்சை முறை, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட நவீந பரிசோதனை முறைகளும் உள்ளன. அம்ரித் மருந்துக்கூடம், ஜன் அவுசதி மேயம், ஆயுர்வேத மருத்துவத்து சிகிச்சைக்காக 30 படுக்கைகளும் உள்ளன. இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பூர்வீகக் குடிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு டிஜிட்டல் சுகாதார மையத்தையும் மருத்துவமனை அமைத்துள்ளது.

போக்குவரத்து தொடர்பு இல்லாத மலைப்பகுதியான காசா, சலூனி, கெய்லாங் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை வழங்க தனியாக சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து லுஹ்னு மைதானத்துக்கு சென்ற பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து