முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோ பைடனின் கருத்தால் அதிருப்தி: அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022      உலகம்
Bilawal 2022--10-16

Source: provided

கராச்சி : அமெரிக்க அதிபர் ஜோபைடன், பாகிஸ்தான் குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் கோரும் வகையில் அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.  

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஜோபைடன், எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் பாகிஸ்தான் நாடு தான் உலகின் மிக ஆபத்தாத நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.  இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறுகையில், 

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை பொறுத்தவரை அதன் பாதுகாப்பு குறித்த சர்வதேச விதிகளை கடைபிடிக்கிறோம். இவ்விஷயத்தில் அமெரிக்க அதிபரின் கருத்து ஆச்சரியமளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபரின் உரை குறித்து விளக்கம் கோரப்படும்.

இதுபோன்ற கருத்துகள் அமெரிக்காவுடனான உறவுகளை பாதிக்கும். பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா எழுப்பி உள்ள கேள்விகளுக்கும், கவலைகளுக்கும் எங்களால் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து