முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2022      விளையாட்டு
Punch-fight 2022-11-06

Source: provided

அம்மன் : ஜோர்டான் நாட்டின் அம்மன் நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை ஆசிய குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய வீராங்கனை மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான லவ்லினா போர்கோஹெயின் மற்றும் கஜகஸ்தானின் வேலன்டினா கல்ஜோவா ஆகியோர் 75 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதியில் விளையாடினர். 

இந்த போட்டியில், 3-2 என்ற புள்ளி கணக்கில் லவ்லினா வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால், இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பினை அவர் உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன்பு மீனாட்சி (52 கிலோ எடை பிரிவு), பிரீத்தி (57 கிலோ எடை பிரிவு), பர்வீன் (63 கிலோ எடை பிரிவு) மற்றும் அங்குஷிடா போரோ (66 கிலோ எடை பிரிவு) ஆகியோர் தங்களது காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி, இந்தியாவுக்கு பதக்கங்களை உறுதி செய்து உள்ளனர். இதனால், இந்தியாவுக்கு மொத்தம் 5 பதக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து