முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச மருத்துவ மாநாட்டில் பங்கேற்க 2000 மருத்துவர்கள் பதிவு: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Ma-Subramaiyan 2022-11-23

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்ள 2000 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தெருக்குறல் அறிவு என அறியப்படும் பிரபல இசை கலைஞர் அறிவு, பொது சுகாதார துறை நூற்றாண்டு விழாவிற்காக எழுதி, இசையமைத்து பாடிய பாடலை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

பொது சுகாதாரத்துறை நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களை கண்டுள்ளது. போலியோ, காலரா உள்ளிட்ட பல நோய்களை பொது சுகாதாரத்துறை ஒழித்துள்ளது. தற்போது கொரோனாவையும் இந்த துறை சிறப்பாக கையாண்டுள்ளது. பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா  டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சர்வதேச மருத்துவ மாநாடாக கொண்டாடப்படவுள்ளது. 

இதில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளனர். 250-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வறிக்கைகள் வந்துள்ளன. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் பதிவு செய்ததில் இருந்தே, இந்த துறையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து