முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 6 நாள்களில் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      ஆன்மிகம்
Sabarimala 2022 09 09

Source: provided

சபரிமலை : சபரிமலையில் கடந்த 6 நாள்களில் மட்டும் 2.61 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மேலும், கார்த்திகை மாதத் தொடக்கம் என்பதாலும், அடுத்தடுத்த நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக பேசிய கேரள தேவசம்போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், முதல் நாளான நவம்பர் 17ஆம் தேதி 47,947 பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போதுவரை 6 நாள்களில் 2,61,874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

மேலும், கார்த்திகை மாத இறுதி வரை பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், அடுத்தடுத்த நாள்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து