முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகராட்சியின் விழிப்புணர்வு குறும்படத்தில் தூய்மை பணியாளராக யோகி பாபு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      சினிமா      தமிழகம்
Yogi-Babu-2022 11 24

சென்னை மாநகராட்சி சார்பில் உருவாகவுள்ள விழிப்புணர்வு குறும்படத்தில், வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளராக நடிகர் யோகி பாபு நடிக்கிறார். 

குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்படும் நிலையில், அதில் தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபுவை வைத்து குறும்படம் இயக்கப்படுகிறது.

உர்பேசர் ஸ்மித் தனியார் நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்குக் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்த குறும்பட படப்பிடிப்பில் யோகி பாபு கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் போன்று சீருடை அணிந்து, 3 சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து