முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.ஜெ. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் இலவச பொதுமருத்துவ முகாம் - கண்சிகிச்சை முகாம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பலன் அடைந்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      தமிழகம்
Sellur-Raju 2022-11-27

Source: provided

மதுரை : ஆர்.ஜெ. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் நடைபெற்ற இலவச பொதுமருத்துவ முகாம் - கண்சிகிச்சை முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பலன் அடைந்தனர். இந்த முகாமினை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்திராஜூ, அறக்கட்டளை நிர்வாகிகள் ரம்யா கணேஷ்பிரபு, கணேஷ்பிரபு, செளமியா விஜயகுமார், விஜயகுமார், விஷ்ணுசாகர், விபிண்சாகர், வருண்சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்.ஜெ. தமிழ்மணி சாரிட்டபிள் அண்ட் எஜுகேஷன் டிரஸ்ட்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று காலை ஜெய்ஹிந்து புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மதுரை மாநகர் மாவட்டஅ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. துவக்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்ட் நிர்வாகிகள் ரம்யா கணேஷ்பிரபு, கணேஷ்பிரபு, சௌமியா விஜயகுமார், விஜயகுமார், விஷ்ணுசாகர், விபின்சாகர், வருண்சாகர் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி செயலாளர் பைக்காரா கருப்புசாமி, கவுன்சிலர்   எஸ்.எம்.டி.ரவி, சண்முகசுந்தரம், முருகேசன், பாசறை சங்கர்,மரக்கடை சரவணன், வீரா, மெடிக்கல் குபேந்திரன், அனுப்பானடி பாலகுமார், பார்த்தசாரதி, என்.எப்.எஸ்.அப்துல்காதர், விக்டர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்.ஜெ. தமிழ்மணி சாரிடபிள் எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் மதுரை ஜெய்ஹிந்துபுரம் அரவிந்த் தியேட்டர் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பலன் அடைந்தனர். இந்த முகாமில் உள் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்கு லென்ஸ்,மருந்து, தங்கும் வசதி உணவு மற்றும் போக்குவரத்து வசதி அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது .

40 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கட்டாயம் கண் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவ முகாமில் ஈஸ்வரா மருத்துவமனை தல்லாகுளம் டாக்டர் பரத் குமார், பிரியதர்ஷினி மற்றும் மருத்துவக் குழுவினரும் முகாமில் சிகிச்சை அளிக்கின்றனர். இம்முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை மாற்று அறுவை சிகிச்சை விபத்து காப்பு சிகிச்சை, மூளை, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நரம்பியல் மருத்துவம் அறுவை சிகிச்சை மகளிர் நலம் மகப்பேறு சிகிச்சை குழந்தையின்மை சிகிச்சை குழந்தைகள் நல சிகிச்சை குழந்தைகள் எழும்பியல் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை முகசீரமைப்பு அறுவை சிகிச்சை குடல் அறுவை சிகிச்சை சிறுநீரக மருத்துவம் சிறுநீரக அறுவை சிகிச்சை காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை ரத்த நாள அறுவை சிகிச்சை டயாலிசிஸ் போன்ற அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பார்க்கப்படுகிறது.

இம்முகாமில் ராதா பல் மருத்துவக் குழுவினர் பங்கேற்கும் நோயாளிகளுக்கு மருத்துவர்களால் மருந்து பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்படும்.

மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. ராதா பல் மருத்துவமனை குழுவினர்களால் இலவச பல் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவ முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து