முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் மதுரையில் துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      ஆன்மிகம்
Ayyappa 2022-11-27

Source: provided

மதுரை : கார்த்திகை மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும் பொழுதோ சபரிமலையில் ஐயப்ப தரிசனம் முடிந்து திரும்பும் பொழுது  உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனத்திற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மதுரை எல்லீஸ் நகர் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும். 

அங்கு ஐயப்ப பக்தர்கள் அதிகமாக கூடுவார்கள் அப்படி கூடும் இடத்தில் ஐயப்ப பக்தர்கள் பசியாறி செல்வதற்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக தொடர் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

இந்த அன்னதானத்தினை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் நேற்று துவக்கி வைத்தார். மதுரைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் எவ்வளவு பேர் வந்தாலும் எந்த நேரத்தில் வந்தாலும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுரை யூனியன் 39 சார்பில் தொடர் அன்னதானம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து