தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள் மற்றும் 1.65 லட்சம் விசைத் தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
ஆனாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நேற்று முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த ஒவ்வொரு பிரிவு அலுலகத்திலும் தலா ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஊழியர் பொதுமக்களுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து கொடுக்கிறார். இதற்காக பொது மக்கள் தங்களின் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்தால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். இதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர்களின் செல் போனுக்கு குறுஞ்செய்தியும் வரும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க முடியும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டண அட்டையுடன் தங்களின் ஆதார் அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்று இணைக்க வேண்டும். சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் இணைப்புடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்த பிறகு வீடு மாறி செல்லும் நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற குழப்பம் வாடகை தாரர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் வீடு மாறி வேறு வீட்டுக்கு குடியேறும் போது அந்த வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களின் ஆதார் எண்ணை இணைத்து மின் கட்டணம் செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்படுமோ? வாடகைதாரர்கள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடினால் எதிர்காலத்தில் ஏதாவது சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வாடகைதாரர்களின் ஆதார் இணைப்பு மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் உரிமைகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளிடையே மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் பொது மக்களுக்கு உள்ளன.
ஆனால் அந்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு நிவர்த்தி செய்வது என்று அவர்களுக்கு தெரிய வில்லை. முகாம்களில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சரியாக பதில் சொல்ல தெரிய வில்லை. இதற்கிடையே பொது மக்களின் கேள்விக்கு இணையதளத்தில் பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 18 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 4 days 14 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
05 Feb 2023சென்னை : காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் வித
-
சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
05 Feb 2023சென்னை : வாணியம்பாடியில் சேலை வழங்கும் நிகழ்வில் உயிரிழந்த பெண்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.
-
சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு
05 Feb 2023புதுடெல்லி : சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
-
இந்திய அணியை எதிர்கொள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் தயாராக உள்ளனர் : ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்
05 Feb 2023பெங்களூரு : இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
-
அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனிமேல் முதலில் நுழைவுத்தேர்வு : ராணுவ வட்டாரங்கள் தகவல்
05 Feb 2023புதுடெல்லி : அக்னிபாத் வீரர் பணியிடங்களுக்கு இனி மேல் முதலில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மனு தாக்கல் செய்யும் பணி நாளை முடிவுக்கு வருகிறது : 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
05 Feb 2023மதுரை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்து வரும் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நாளை 7-ம் தேதி முடிவுக்கு வருகிறது.
-
கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
05 Feb 2023பெங்களூரு : கர்நாடகாவிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி துமகூருவில் எச்.ஏ.எல்.
-
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் 10-ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
05 Feb 2023சென்னை : பொதுத்தேர்வு எழுதவுள்ள 11-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 10-ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: மகாபாரத கிருஷ்ணரோடு ஸ்டாலினை ஒப்பிட்டு கே.எஸ்.அழகிரி கூறிய உவமை
05 Feb 2023கும்பகோணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், அவர் எங்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கின்றார் எ
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்
05 Feb 2023இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.
-
காற்றில் கலந்தது கானக்குயில்: 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதைக்கு பின் வாணி ஜெயராம் உடல் தகனம்
05 Feb 2023சென்னை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
-
கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
05 Feb 2023போர்ட் பிளேயர் : கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
குஜராத்தின் மோா்பி பால விபத்து: 9 பேரின் ஜாமீன் மனு நிராகரிப்பு
05 Feb 2023காந்திநகர் : குஜராத்தின் மோர்பியில் நிகழ்ந்த பால விபத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுக்களை கோர்ட் நிராகரித்து விட்டது.
-
சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு : தலைமை நீதிபதி பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்
05 Feb 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
-
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் : மேகாலயா முதல்வர் தேர்தல் வாக்குறுதி
05 Feb 2023ஷில்லாங் : தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மேகாலயா முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார
-
நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை
05 Feb 2023புதுடெல்லி : நிதி மோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
-
உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா : சீனா கண்டனம்
05 Feb 2023வாஷிங்டன் : அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை : ஆய்வு மையம் தகவல்
05 Feb 2023சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை : பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
05 Feb 2023இஸ்லாமாபாத் : ராணுவம் பற்றி அவதூறு பரப்பினால் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் காம்ப்ளிக்கு நேரில் ஆஜராக பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ்
05 Feb 2023மும்பை : குடிபோதையில் மனைவியை தாக்கிய புகாரில் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
05 Feb 2023சென்னை : ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயில் : இந்தியன் ரயில்வே அறிமுகம்
05 Feb 2023புதுடெல்லி : குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியன் ரயில்வே, டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயிலை அறிமுகம் செய்கிறது.
-
வரும் 18-ம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
05 Feb 2023புதுடெல்லி : ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-05-02-2023
05 Feb 2023 -
அதிகாரபூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
05 Feb 2023சென்னை : அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார்.