முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023 உலகக் கோப்பைக்கு நேரடித் தகுதி: ஒரு இடத்துக்கு மே.இ.தீவுகள் உள்ளிட்ட 4 அணிகள் போட்டி

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      விளையாட்டு
4-teams 2022-11-28

Source: provided

லண்டன் : 2023 உலகக் கோப்பைக்கு கிரிக்கெட் போட்டிக்கு நேரடித் தகுதி பெற ஒரு இடத்துக்கு மே.இ.தீவுகள் உள்ளிட்ட 4 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அண்மையில நடைபெற்ற போட்டியில் 

6 அணிகள் தகுதி...

2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்ற நிலையில் தற்போது 7-வது அணியாக ஆப்கானிஸ்தான் அணி நேரடியாகத் தகுதியடைந்துள்ளது.

ஆப்கான் தகுதி...

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. 2-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 115 புள்ளிகளை அடைந்து 7-ம் இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் அபராதம் காரணமாகக் கைவசமுள்ள புள்ளிகளை இழக்காமல் இருந்தாலே நேரடித் தகுதிக்கு எவ்விதச் சிக்கலும் ஏற்படாது. 

மீதம் ஒரு இடத்துக்கு...

2023 உலகக் கோப்பைக்கு 8 அணிகளே நேரடியாகத் தகுதி பெற முடியும். ஆப்கானிஸ்தானுடன் 7 அணிகள் தற்போது தகுதி பெற்றுவிட்டதால் மீதமுள்ள ஓர் இடத்துக்காக தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளன. இந்த 4 அணிகளில் எப்படியும் 3 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாடிய பிறகே 2023 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.

8 இடங்களுக்கு...

ஒருநாள் சூப்பர் லீக் விதிமுறைப்படி 2023 உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற வேண்டுமென்றால் 24 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி (சொந்த மண்ணிலும் வெளிநாடுகளிலும் 4 ஒருநாள் தொடர்கள், ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள்), 13 அணிகளில் முதல் 8 இடங்களைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டும். தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகளில் எந்த அணி தகுதிச்சுற்று வரைக்கும் போகாமல் நேரடியாகவே தகுதி பெறப்போகிறது?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து