Idhayam Matrimony

உலக கோப்பை கால்பந்து: செர்பியா, கேமரூன் ஆட்டம் 'டிரா'

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      விளையாட்டு
Serbia-Cameroon 2022-11-28

Source: provided

தோகா : கத்தாரில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையில் கேமரூன் - செர்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது.

முன்னணி...

முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் 0-1 எனத் தோற்றது கேமரூன். அதேபோல செர்பியா தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் 0-2 எனத் தோற்றது. அதனால் நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் முதல் வெற்றி தேவைப்பட்டன.  29-வது நிமிடத்தில் கேமரூன் அணி முதல் கோலடித்தது. ஆனால் முதல் பாதி முடிவடைவதற்கு செர்பிய அணி இரு கோல்களை அடித்து முதல் பாதியின் முடிவில் 2-1 என முன்னணியில் இருந்தது. 

மிகவும் பரபரப்பு...

பிறகு 53-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடித்து 3-1 என அபாரமான முன்னிலை பெற்றது. ஆனால் 63 மற்றும் 66-வது நிமிடங்களில் கோல்கள் அடித்து 3-3 என ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தது கேமரூன். இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. இறுதியில் எந்த அணியாலும் மேலும் கோலடிக்க முடியாததால் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. எனவே கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து