அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'பியூன்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒருநாள் அணிக்கு மட்டும் ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டி-20 அணிக்கு பிசிசிஐ யாரை கேப்டனாக நியமிக்கும் என்ற கேள்விக்கு தற்போது கௌதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது., கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பெயர்தான் பரிசீலனையில் முதலிடத்தில் இருக்கும் என நம்புகிறேன். இருப்பினும், ஒருசில தொடர்களில், ஐபிஎலில் அவர் சிறப்பாக கேப்டன்சி செய்ததை வைத்து ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க கூடாது. ஐபிஎலில் கோப்பை வென்று கொடுத்தார் என்று கூறிதான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை கொடுத்தோம். இப்போது புது கேப்டனை தேடுகிறோம்.
என்னுடைய தேர்வு பிரித்வி ஷாதான். இவரைத்தான் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். இவர் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர், விஜய் ஹசாரே தொடர், ரஞ்சிக் கோப்பை தொடர்களில் ஆக்ரோஷமாக கேப்டன்ஸி செய்ததை நான் பார்த்திருக்கிறேன். வெற்றிகரமான கேப்டனாகவும் இவர் இருக்கிறார். இவர் டி20 அணிக்கு கேப்டனாக செயல்பட பொருத்தமான வீரர். இவ்வாறு கம்பீர் கூறினார்.2019-ம் ஆண்டில் பிரித்வி ஷா 6 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
________________
மெஸ்சிக்கு மிரட்டல் விடுத்த மெக்சிகோ பாக்சர்
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவிற்கு எதிராக களம் இறங்கியது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடியும் என நிலையில் அர்ஜென்டினா 2-0 என மெக்சிகோவை வீழ்த்தியது.
இந்த போட்டி முடிந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது மெக்சிகோ வீரர் அணியும் ஜெர்சிக்கு மேல் அர்ஜென்டினா வீரர்கள் குதிப்பது போன்றும், மெஸ்சி ஜெர்சியை காலால் மிதித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெர்சியால் அறையை க்ளீன் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இது மெக்சிகோ நாட்டின் குத்துச் சண்டை வீரர் கனாலோ அல்வாரேஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ''நம்முடைய ஜெர்சி மற்றும் தேசியக்கொடியால் அறையை மெஸ்சி சுத்தம் செய்வதை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், ''நான் மெஸ்சியை பார்த்துவிடக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அவருக்கு நன்றாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
________________
டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக டி காக் நியமனம்
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி.டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
________________
மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி வெளியிட்டுளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வார்னர், ஸ்மித், லயான், ஸ்டார்க், ஹேஸ்லேவுட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம்: உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸ்லேவுட், நாதன் லயான். இந்திய நேரப்படி இன்று காலை 7.50 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
________________
அக்ரம் குற்றச்சாட்டு: சலீம் மாலிக் பதில்
வாசிம் அக்ரமின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டிற்கு சலீம் மாலிக் பதில் அளித்துள்ளார். சலீம் மாலிக் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:- அவருடைய கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான் அணி தொடர்களில் விளையாட செல்லும்போது அங்கு சலவை மெசின் பயன்படுத்தப்படும். நாங்கள் யாரும் கைகளால் துணிகளை துவைப்பது கிடையாது.
நான் அவரிடம் இதுகுறித்து இன்றும் பேசவில்லை. அந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. அதனால் அதுகுறித்து முழுமையாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஒரு சகாக்கள். இணைந்து நேரத்தை செலவழித்துள்ளோம். ஆகவே, நான் எந்தவிதமாக சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?. நான் ஏன் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டும்.துணி துவைப்பு, மசாஜ் செய்வது குறித்து அவரை பேசியது, அவர் அவரையே அவமதித்துள்ளார். இவ்வாறு சலீம் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
அகத்திக்கீரை சாம்பார்![]() 2 days 6 hours ago |
ராகி அடை![]() 6 days 4 hours ago |
முருங்கைக்கீரை பொங்கல்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 27-01-2023.
27 Jan 2023 -
ஆஸி., ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று: சானியா - போபண்ணா ஜோடி நாளை பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது
26 Jan 2023மெல்போர்ன்: சானியா மிர்சா - ரோஹன் போபண்ணா ஜோடி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் இறுதிச்சுற்று நாளை நடைபெறவுள்ளது. இறுதிச்சுற்றில் பிரேசில் ஜோடியை எதிர்கொள்கிறது.
-
ஒருநாள் தொடரை போல நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடருமா..? முதல் டி-20 போட்டியில் இன்று மோதல்
26 Jan 2023ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.
-
மகளிர் அண்டர்-19 டி-20 உலகக் கோப்பை: முதல் அரையிறுதியில் இன்று இந்திய-நியூசிலாந்து மோதல்
26 Jan 2023வெல்லிங்டன்: மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
-
மகளிர் ஐ.பி.எல்.: அணியின் பெயரை அறிவித்தது அதானி நிறுவனம்
26 Jan 2023பிசிசிஐ சார்பில் ஆடவருக்கு என ஐபிஎல் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் உலகின் பணம் கொழிக்கும் போட்டியாக திகழ்கிறது.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
இந்திய குடியரசு நாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Jan 2023இந்திய குடியரசு நாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்பு சித்திரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. இந்தியா கேட், டெல்லி ஆளுநர் மாளிகை உள்ளிட்டவை இடம்பெற்றன.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் பங்கேற்பு..!
26 Jan 2023இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேநீர் விருந்து அளித்தார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித
-
புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
27 Jan 2023திருவாரூர் : புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ப
-
மார்ச் 3, 4-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா: இலங்கை அரசு அறிவிப்பு
27 Jan 2023கொழும்பு : மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்
27 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவி
-
பி.பி.சி. ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை
27 Jan 2023சென்னை : குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. தயாரித்துள்ள ஆவணப்படத்தை வெளியிட சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
-
கொடநாடு வழக்கு விசாரணை பிப். 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Jan 2023ஊட்டி : கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி.
-
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டம
-
நியாய விலைக்கடைகள் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
27 Jan 2023சென்னை : நியாய விலைக்கடைகள் மூலம் இலவச வேஷ்டி, சேலைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.