முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைப்பு : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Senthil-Balaji- 2022--11--2

Source: provided

சென்னை : தமிழகத்தில் இதுவரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின் இணைப்பு எண்ணினை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து இருந்தார். இதன்படி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் உள்ள 2,811 பிரிவு அலுவலங்களிலும் நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நவ.29 வரை 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3.69 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.11 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று வரை மொத்தம் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன." இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து