இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.7) மாலை புயலாக வலுவடையக்கூடும் என்பதால், தமிழகத்தில் 9-ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அன்றைய தினம் 15 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: டிச.5-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை (நவ.6) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (டிச.6) மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. பிறகு, மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (7ம் தேதி) மாலை புயலாக வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
இதன் காரணமாக 6ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட் - 9ம் தேதி: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்; ஓரிரு இடங்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் 6ம் தேதி வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் 6ம் தேதியன்று வீசக்கூடும். காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 7ம் தேதியன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 8ம் தேதியன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் 8ம் தேதி காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 8ம் தேதி மாலை முதல் 9ம் தேதி மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், 9ம் தேதி மாலை முதல் 10ம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 10ம் தேதி மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
அண்ணா நினைவு நாள்: வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
29 Jan 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு புனே ; நான் அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளி
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.