முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானாவில் முற்றும் கவர்னர் - முதல்வர் மோதல்: குடியரசு தினவிழாவை புறக்கணித்த சந்திரசேகரராவ்: கவர்னர் தமிழிசை தேசியக்கொடியை ஏற்றினார்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      இந்தியா
Chandrasekhara-Rao 2023 01

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட் உத்தரவையும் மீறி முதல்வர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தின விழா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவிற்கும், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டும் கொரோனாவை காரணம் காட்டி செகந்திராபாத்தில் குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. இதுகுறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாநில அரசு சார்பில் தகவல் அனுப்பி இருந்தனர். அதில் ராஜ் பவனில் தனியாக குடியரசு தின விழாவை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து ஐதராபாத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் தற்போது கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில் மாநில அரசு வேண்டும் என்றே கவர்னரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவை காரணம் காட்டி குடியரசு தின விழாவை ரத்து செய்துள்ளது. எனவே குடியரசு தின விழாவை நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த ஐதராபாத் ஐகோர்ட் வழக்கம்போல் குடியரசு தின விழாவை செகந்திராபாத்தில் நடந்த வேண்டுமென உத்தரவிட்டது.

இருப்பினும் நேற்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழாவில் முதல்வர் சந்தரசேகர ராவ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சந்திரகுமாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக ஐகோர்ட் உத்தரவையும் மீறி முதல்வர் சந்திரசேகர ராவ் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து