முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      உலகம்
Shebaz-Sharif 2023-01-17

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. 

பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி வருகிறது. ஆ

னால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடனை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக நாட்டில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தேசிய சிக்கனக் குழுவை அமைத்தார். 

இந்த குழு அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அமைச்சகங்களின் செலவினங்களை 15 சதவீதம் குறைப்பது, மத்திய அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் எண்ணிக்கையை 78-ல் இருந்து 30 ஆக குறைப்பது போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

தேசிய சிக்கனக் குழு விரைவில் தனது பரிந்துரைகளை இறுதி செய்து, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து