முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Israel 2023 01 28

Source: provided

ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.  இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். 

இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பாலஸ்தீனியரை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 42 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஜெருசலேம் ஜெப ஆலய பயங்கரவாத தாக்குதலுக்கான எங்களின் பதிலடி வலுவாகவும், வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 

ஜெருசலேம் ஜெப ஆலயத் தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை ஏற்கனவே கைது செய்யத் தொடங்கியுள்ளோம். யார் நம்மை காயப்படுத்த முயன்றாலும் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும் நாங்கள் காயப்படுத்துவோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து