முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
Menaka-seeman 2023 01 29

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி பிப்ரவரி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இதே போன்று தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இடைத்தேர்தலில் மேனகா போட்டியிடுவார் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து