எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழனி அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடந்த ராஜகோபுரம், தங்ககோபுரம் மற்றும் உப சன்னதிகளில் வழிபட்டு சென்றனர்.
பழனி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூச திருவிழா முக்கிய சிறப்பு வாய்ந்தது. இவ்விழாவிற்காக மதுரை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருது நகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வருகை தருவார்கள். கும்பாபிஷேக நிகழ்ச்சியால் பக்தர்கள் வருகை கடந்த சில நாட்களாக குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் பழனி நோக்கி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
தைப்பூச திருவிழா நேற்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கிழக்கு ரதவீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் பிப்ரவரி 4-ம் தேதி நடக்கிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தோளுக்கிணியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்த நிகழ்ச்சியும், மதியம் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம், தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
பிப்ரவரி 5-ம் தேதி திருக்கல்யாணமும், அன்று இரவு சாமி வீதிஉலாவும் நடைபெறும். பிப்ரவரி 7-ம் தேதி தெப்பத்தேர் உற்வசத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தைப்பூசத்தையெட்டி பாதயாத்திரை பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பழனிக்கு படையெடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் தி.மு.க. உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் ஓ.பி.எஸ்..!
27 Feb 2026தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.
-
சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் கதறி அழுத அரவிந்த் கெஜ்ரிவால்
27 Feb 2026டெல்லி, சி.பி.ஐ. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டப் பின் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுத சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விவாகரத்து கோரி விஜய் மனைவி கோர்ட்டில் மனு வருகிற ஏப்ரல் 20-ம் தேதி விசாரணை
27 Feb 2026செங்கல்பட்டு, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வருகிற 4-ம் தேதி திருமண வரவேற்பு: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நேரில் அழைப்பு
27 Feb 2026ஐதராபாத், வருகிற 4-ந்தேதி நடைபெற உள்ள திருமண வரவேற்பில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
-
தமிழகத்துக்கு தேர்தல் நேரத்தில் கூட மத்திய அரசு நிதி தரவில்லை: கோவை மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Feb 2026கோவை, கோவை, மதுரைக்கு மெட்ரோவுக்கு பிரதமர் மோடி ஏன் அதுமதி தரவில்லை.
-
அனைத்து உண்மைகளும் வெளிப்படும் வரை நெருக்கடிகளை உறுதியோடு எதிர்கொண்ட கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு பாராட்டுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
27 Feb 2026சென்னை, உண்மை வெளிப்படும் வரை அனைத்து நெருக்கடிகளையும் உறுதியோடு எதிர்கொண்ட மதிப்பிற்குரிய நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவுக்கு எனது பாராட்டுகள் என்
-
கெஜ்ரிவால் விடுவிப்பை எதிர்த்து சி.பி.ஐ. உடனடியாக மேல்முறையீடு
27 Feb 2026புதுடெல்லி, மதுபானக் கொள்கையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சி.பி.ஐ.


