முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி திரெளபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Murmuu-Nirmala 2023 02 01

Source: provided

புதுடெல்லி : மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை சந்தித்தார்.

2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் அங்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மத்திய இணை நிதியமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கராட், ஸ்ரீ பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர், நிதியமைச்சக முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.

தொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன், மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து