முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிளா சம்மான் பச்சாட் பத்ரா புதிய சேமிப்பு திட்டம் அறிவிப்பு : மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் தொகை ரூ.30 லட்சமாக அதிகரிப்பு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2023      இந்தியா
Nirmala 2023 02 01

Source: provided

புதுடெல்லி : மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் தொகை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையின்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். புதிய திட்டமானது மகிளா சம்மான் பச்சாட் பத்ரா என்று அழைக்கப்படும்.

இந்தப் புதிய திட்டமானது பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை டொபாசிட் செய்ய முடியும். இந்த புதியத் திட்டம் 2025 மார்ச் மாதம் வரை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த புதிய திட்டத்தில் நிலையான வட்டியாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்தில் பகுதி தொகையை திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.

மூத்த குடிமக்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தினையும் நிதியமைச்சர் அறிவித்தார். இந்தப் புதிய திட்டத்தின்படி, அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும், மத்திய பட்ஜெட்டின் நிதித்துறை முன்னுரிமைகளின் கீழ் அறிவிக்கப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து