Idhayam Matrimony

சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
CM 2024-12-21

Source: provided

சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெற வேண்டும் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு அவர் உத்தரவிட்டார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 87 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். 

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் தி.மு.க. செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தார். சந்திப்பின் போது சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். 

கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது நமது இலக்கு. அந்த இலக்கை எட்ட அனைவரும் உறுதியோடு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் நிர்வாகிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து