Idhayam Matrimony

டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
Delhi-Issue 2025-11-18

Source: provided

புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் உன் நபி என்பதும், இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த டெல்லி தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

இதில், பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன. டெல்லி தற்கொலை கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அந்த தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, டிரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை உருவாக்கி அவற்றை பயன்படுத்தி பேரழிவை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி, ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை போன்று, டிரோன்களை பயன்படுத்தி பாதிப்புகளையும் மற்றும் பேரழிவையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

உமர் உன் நபியுடன் ஒன்றாக செயல்பட்ட 2-வது நபரான ஜசிர் பிலால் வானி என்ற டேனிஷ் என்பவரை ஸ்ரீநகரில் வைத்து என்.ஐ.ஏ. நேற்று முன்தினம் கைது செய்தது. அவரிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. இவரும், டெல்லியில் கைது செய்யப்பட்ட ரஷீத் அலியை போன்று ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்தவர். இதுபற்றி என்.ஐ.ஏ. வெளியிட்ட அறிக்கையில், டிரோன்களை உருவாக்கியும், ராக்கெட்டுகளை தயாரிக்க முயன்றும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு டேனிஷ், தொழில்நுட்ப ரீதியாக உதவியாக செயல்பட்டு உள்ளார். டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு முன்னர் இதனை நடத்த திட்டமிட்டு உள்ளது என அந்த் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து